புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2014


தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
இந்திய மீனவர்களின் அத்து மீறல்களை தடுக்கும் நோக்கில் ஜெயலலிதாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென மீன்வளத்துறை அமைச்சர் சரத் குமார வீரக்கோன் கோரியுள்ளார்.


நாடாளுமன்றத்தில், அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இந்தக் கோரிக்கைக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளித்துள்ளது. ஜேவிபியும் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் தமிழக முதல்வருக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்குமா? என கேள்வி எழுப்பியுள்ள சரத் குமார வீரக்கோன், தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர்களின் வளங்களை சுரண்டி சூறையாடி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

ad

ad