நயன்தாராவின் கண்ணீருக்கு பதில் சொன்ன ஆர்யா!
‘நாங்க ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். எங்களுக்குள்ள வேற எதுவுமே இல்ல’ என்று ஆர்யாவும் நயன்தாராவும் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக சொல்லிவிட்டாலும் அவர்களை இணைத்து வெளியாகும் செய்திகளுக்கு குறைவில்லை.
ஆர்யாவின் தம்பி சத்யா நடித்துள்ள அமரகாவியம் திரைப்படத்தை ஸ்பெஷலாக பார்த்த நயன்தாரா ‘ஓஓஓ’-வென கதறி அழுதாராம். இதுபற்றி ஒரு ரியல் நியூஸும் ரீல் நியூஸும் திரையுலகில் வலம் வந்தன.
ரீல் நியூஸ் :
படம் பார்த்து நயன்தாரா கதறி அழுததற்கு காரணம், அமரகாவியம் திரைப்படம் நயன்தாராவின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதத்தில் இருந்தது தான் என்று பேசப்பட்டது.
ரியல் நியூஸ் :
சமீபத்தில் நடைபெற்ற அமரகாவியம் திரைப்படத்தில் இதுபற்றி பேசிய ஆர்யா ’நயன்தாரா அழுதது உண்மை தான். ஆனால் அதற்கு காரணம் படத்தின் தாக்கம் தானே தவிர, சொந்த காரணங்கள் எதுவுமே இல்லை. பல வருடங்காள் கழித்து தமிழ் சினிமாவின் நல்ல 10 படங்களின் பட்டியல் போட்டால், அதில் அமரகாவியமும் இடம்பெறும்” என்று கூறினார்.