புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2014



அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளராக 7வது முறையாக ஜெயலலிதா தேர்வு


அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளராக 7வது முறையாக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்பதவிக்கு ஜெயலலிதா தவிர வேறுயாரும் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே  போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

1988, 1989, 1993, 1998, 2003, 2008 ஆகிய 6 முறை பொதுச் செயலாளராக ஜெயலலிதா தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். அவர் 7–வது முறையாக பொதுச் செயலாளர் ஆன அறிவிப்பு வெள்ளிக்கிழமை முறைப்படி வெளியிடப்பட்டது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. அதன்படி இந்த முறை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20–ந்தேதி தொடங்கியது. அன்றைய தினமே ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவை அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும் தேர்தல் ஆணையருமான விசாலாட்சி நெடுஞ்செழியனிடம், ஜெயலலிதா சார்பில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார்.

24–ந்தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. ஜெயலலிதா மீண்டும் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று 2,400–க்கும் அதிகமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் ரூ.25 ஆயிரம் டெபாசிட் செலுத்தி விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் இன்று (29–ந்தேதி) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேர்தல் ஆணையர் விசாலாட்சி நெடுஞ்செழியன் இன்று முடிவை அறிவித்தார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கு முதல்– அமைச்சர் ஜெயலலிதா தவிர வேறுயாரும் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே அவர் 7–வது முறையாக பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்

ad

ad