புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2014


ரொறொன்ரோவில் வியாழக்கிழமை நடாத்தப்பட்ட திடீர் சோதனையில் எட்டு பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மேலும் ஒருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.
ரொறொன்ரோ பொலிசார் வேறு இரண்டு படையினரின்
உதவியுடன் ரொறொன்ரோ, யோர்க் பிராந்தியம் மற்றும் நயாகரா பிராந்தியம் ஆகிய பகுதிகளில் பல வேலைத்தளங்கள், சேமிப்பு அலகுகள் போன்ற இடங்களில் வியாழக்கிழமை இத்தேடுதல் முயற்சியில் ஈடுபட்டனர்.
Project Yellowbird  எனப்படும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்ற இம்முயற்சியில் செல்வந்தர்கள் வசிக்கும் சுற்றுப்புறங்களில் இடம்பெற்ற உயர்-ரக வாகனங்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களின் திருட்டுக்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
Porsche, Bentley, BMW SUV  உட்பட 20-ற்கும் மேற்பட்ட உயர்-ரக சொகுசு வாகனங்கள் திருட்டுப் போனதை விசாரனையாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். திருடர்கள் வீடுகளை உடைத்து உள்ளே சென்று இக்னிசன் திறப்புக்கள் மற்றும் பொருட்களையும் எடுக்கின்றனர்.
திருடப்பட்ட வாகனங்களின் மதிப்பு 2-மில்லியன் டொலர்களிற்கும் அதிகமானதென கூறப்படுகின்றது.
திருட்டுப் போனதாக கண்டுபிடிக்கப்பட்ட வாகனங்களில் 4 ஏற்கனவே வெளிநாடுகளிற்கு சென்று விட்டன. இது சம்பந்தமாக வெளிநாடுகளில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
30-வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட உள்ளதாகவும் எட்டு பேர்கள் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
2013-டிசம்பர் மாதம் மஞ்சள் நிற Porsche களவாடப்பட்டதன் பின்னர் இந்த நடவடிக்கை Project Yellowbird என அறிமுகப்படுத்தப் பட்டது.

ad

ad