புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

29 ஆக., 2014

புதிய தீயணைப்பு வண்டியை வாங்க கொழும்பு செல்கிறார் முதல்வர் 
யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவுக்கு புதிய தீயணைப்பு வண்டி ஒன்று நாளைய தினம் வழங்கப்படவுள்ளது.


இதற்கான நிகழ்வு நாளை காலை 9 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது. தீயணைப்பு வண்டியினை அமைச்சர் அதாவுல்லாவிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா இன்றைய தினம் கொழும்புக்கு சென்றுள்ளார்.

எனினும் யாழ். மாநாகர சபையின் தீயணைப்பு பிரிவு முன்னர் போதிய வசதிகள் இன்றி சேவையினை செவ்வனே வழங்க முடியாது இருந்தது. எனினும் தற்போது வசதிகள் ஓரளவு அதிகரிக்கப்பட்டதனையடுத்து 24 மணித்தியாலமும் சேவை வழங்கப்பட்டு வருகின்றது.

பெரும்பாலான தீ விபத்துக்கள் தடுப்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவினராலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தீ விபத்து மற்றும்  தீயணைப்பு பிரிவினரின்  சேவைகள்  தொடர்பில் கருத்தரங்குகளும் பாடசாலை, பொது இடங்கள் என்பவற்றில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.