புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2014


பா.ம.க. பிரமுகர் கொலை: விழுப்புரம் அருகே பதட்டம்: போலீசார் குவிப்பு

விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 45). பா.ம.க. பிரமுகர். இவருக்கு மனைவி மற்றும் 5 மகன்கள் உள்ளனர். முன்புற திண்ணையில் படுத்து தூங்கிய முருகனின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டிற்குள் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் வெளியே வந்தனர்.

அப்போது முருகன் கழுத்து மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். முருகன் கொலை செய்யப்பட்ட தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனால் அவரது உறவினர்கள், பா.ம.க.வினர் சம்பவ இடத்திற்கு திரண்டனர். 

முருகனை அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன், மற்றும் அவரது தரப்பை சேர்ந்தவர்கள் வெட்டி கொலை செய்ததாக கூறி ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்களான கண்ணன், வீரபத்திரன் உள்ளிட்ட 3 பேரின் வீட்டை தீவைத்து எரித்தனர். மேலும் கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு சாலை மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். 

ஏற்கனவே முருகனின் தம்பியான பா.ம.க. ஒன்றிய செயலாளர் வக்கீல் ஆறுமுகம் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாத நிலையில் தற்போது முருகன் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறி அவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீத்தாராமன் சென்று முருகனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதாக அவர் உறுதி அளித்தார். அதனை ஏற்று அவர்கள் கைவிட்டனர்.

இதையடுத்து போலீசார் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ad

ad