புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2014

இலங்கை வீராங்கனை தர்சினி  சிவலிங்கம் 66 இல்65 ஐ போட்டு சாதனை
சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற மலேசியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விறுவிறுப்பான ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டியில் 66 க்கு 62 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன் குழு பி யிலிருந்து தோல்வியுறாத அணியாக அரை இறுதிக்கு முன்னேறியுள்ள இலங்கை, அடுத்த வருடம் உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியை பெறும் முயற்சியில் இறங்கவுள்ளது.
 
மலேசியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இலங்கை அணியினர் வெளிப்படுத்திய ஆற்றல்கள் அனைவரையும் பிரமிக்க வைத்தது. 
முதலாவது கால் மணி நேர ஆட்டத்தில் மலெசியா 17 க்கு 14 என்ற கோலகள் கணக்கில் முன்னிலை வகித்தபோது இலங்கை அணி தோல்வி அடைந்து விடுமோ என்ற சந்தேகம் எழுந்தது.
 
ஆனால் இரண்டாவது கால் மணி நேர ஆட்டத்தில் மிகவும் புத்தி சாதுரியத்துடனும் சிறந்த வியூகங்களுடனும் விளையாடிய இலங்கை 19 க்கு 14 என முன்னிலை வகித்தது. 
 
இதன் பலனாக இடைவேளையின் போது 33 க்கு 31 கோல்கள் அடிப்படையில் 2 கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை முன்னிலையில் இருந்தது.
எவ்வாறாயினும் மூன்றாவது கால் மணி நேர ஆட்டத்தில் இலங்கை அணி எதிர்கொண்ட சிறு தடுமாற்றத்தை சாதகமாக்கிக் கொண்;ட மலேசியா 17 க்கு 16 என வெற்றிபெற்று கோல்கள் நிலையை 49 க்கு 48 என ஆக்கியது.
 
ஆனால் கடைசி கால் மணி நேர ஆட்டப் பகுதியின் ஆரம்பம் முதல் இறுதிவரை சிறந்த வியூகங்களை அமைத்து விளையாடிய இலங்கை 17 க்கு 14 என வெற்றிபெற்று ஒட்டு மொத்த கோல்கள் நிலையை 66 க்கு 62 என தங்களுக்கு சாதமாக்கிக்கொண்டது.
 
இலங்கையின் வெற்றியில் பிரதான பங்கு வகித்த தர்ஜினி சிவலிங்கம் 72 முயற்சிகளில் 65 கோல்களைப் போட்டார்.
அணித் தலைவி ஷஷிக்கா சிறிவர்தன, மரீஷா பெர்னாண்டோ, குமரின் டி சில்வா ஆகியோர் தங்களது அனுபவத்தின் மூலம் திறமையை வெளிப்படுத்தினர்.
 
மற்றைய போட்டி முடிவுகள்
சைனீஸ் தாய்ப்பே 60 - மியன்மார் 21
ஜப்பான் 54 - வியட்நாம் 23
சிங்கப்ப+ர் 73 - இந்தியா 20
இன்றைய தினம் ஓய்வு தினமாகும். நாளைய தினம் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான முதலாவது அரை இறுதி ஆட்டமும் இலங்கைக்கும் ஹொங் கொங்குக்கும் இடையிலான இரண்டாவது அரை இறுதி ஆட்டமும் நடைபெறவுள்ளன.

ad

ad