புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2014

தமிழின குடிப்பரம்பலை அழித்துவிடவே அரசு திட்டம்:மாவை எம்.பி
news
தமிழர்களது போராட்டத்தை யாருமே நிராகரிக்க முடியாது ஏனென்றால் தமிழர்களது போராட்டத்தில் நியாயம்,நேர்மை இருப்பதாக தமிழரசுக் கட்சியின்  தலைவரும்,நாடாளுமன்ற  உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
 
இன்று காலை 9மணியளவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள மாவை. சேனாதிராஜாவுக்கு யாழ்.மாவட்ட தமிழரசுக் கட்சியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
வடக்கு,கிழக்கு மக்களின் குடிப்பரம்பலை அழித்து விடவேண்டும் என்பதே அரசின் கடந்த ஐந்தாண்டு கால கூடுதலான எதிர்பார்ப்பாக இருக்கின்றது. போர் முடிவுற்று 5ஆண்டு காலப்பகுதியிலே  அரசினால்அதிகளவான பிரச்சினைகள் எழுந்துள்ளதுடன் தமிழ் மக்களின் நிலத்தையும்,இனத்தையும் அழிக்கும் நடவடிக்கையே அரசு மேற்கொண்டு வருகின்றது.
 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அடுத்த முகங்களால் தமிழரசுக் கட்சிக்கு எதிராக கூக்குரல் கிளம்புகின்றது.புதிய இரத்தங்கள் கட்சிக்குள் உட்பாய்ச்சப்படுமானால் அதுவும் பொருத்தமானதாகவே  இருக்கும்.
 
நாம் எமது நிலங்களுக்கு நட்டஈடு கேட்கவில்லை.எமது நிலம் எமக்கே வேண்டும் என்றே கேட்கின்றோம்.ஆனால் அரசு தமிழர் வாழும் மண்ணில் சிங்களவர்களை அனுமதிக்கின்றனர்.இராணுவத்தை குடியேற்றுகின்றனர்.இவ்வாறான 
செயல்களினால் தமிழினம் அழிக்கப்படுகின்றது.
 
தமிழ் மக்களது போராட்டத்தை யாருமே நிராகரிக்க முடியாது ஏனென்றால் நமது போராட்டத்தில் நியாயம்,நேர்மை உண்டு.அதனால் தான் சர்வதேசமே நம்பக்கம் ஆதரவாக இருக்கின்றது.எனவே தன்னாட்சியை நாம் நிலைநாட்ட வேண்டும்.ஆகவே தமிழ் மக்களை இன்னொரு அழிவுக்குள் கொண்டு செல்லாமல் தமிழ் மக்களின் நிலத்தையும்,இனத்தையும் பாதுகாக்க வேண்டும்.
 
மேலும் எனக்கு மாலை,பொன்னாடைகள் அணிவித்து வரவேற்பது முக்கியம் அல்ல எமது தமிழ் மக்கள் இரத்தத்தை 
எங்கள் மேலே சொறிந்தார்கள்  அதுதான் உண்மையான வரவேற்பு எனவும் அவர் தெரிவித்தார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=886153421912370349#sthash.dNtdKeA3.dpuf

ad

ad