கிழக்கு உக்ரேனில் டொனெட்ஸ்க் விமான நிலையத்துக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை புதிதாக ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
மேற்படி தாக்குதல்களானது பிராந்தியத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள 36 மணி நேர
யுத்த நிறுத்தம் முறிவடையக்கூடும் என்ற அச்சத்தை தோற்றுவிக்கவுள்ளது.
உக்ரேன் ரஷ்யா கிளர்ச்சியாளர்கள் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு
அமைப்பின் பேச்சுவார்த்தைகளையடுத்து 12 அம்ச சமாதான உடன்படிக்கையொன்று
கைச்சாத்திடப்பட்டது.
உடனடியான பரஸ்பர யுத்த நிறுத்தத்தை உறுதிப்படுத்தல் கிழக்கு உக்ரேனில்
டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களிலுள்ள தற்காலிக சுயாட்சி
அரசாங்கங்கள் விசேட சட்டத்தின் கீழ் செயற்பட அனுமதிக்கும் வகையில்
அதிகாரத்தை பரவலாக்கல் அனைத்து கைதிகளையும் சட்ட விரோதமாக தடுத்து
வைக்கப்பட்டிருப்பவர்களையும் விடுதலை செய்தல் டொனெட்ஸ்க் மற்றும்
லுஹான்ஸ்கில் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தல் சட்ட விரோத உக்ரேனிய
பிராந்தியத்திலிருந்த ஆயுதக்குழுக்களையும் சட்டவிரோத இராணுவ
தளபாடங்களையும் அகற்றல் என்பன உள்ளடங்களான விடயங்களை இந்த 12 அம்ச திட்டம்
உள்ளடக்கியுள்ளது.
கிழக்கு உக்ரேனிய பிராந்தியத்தில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இடம்பெற்று
வரும் மோதல்களில் குறைந்தது 2,600 பேர் பலியாகியுள்ளனர். சனிக்கிழமை
பின்னிரவு மரியுபோவின் கிழக்கு பகுதியிலுள்ள அரசாங்கச் சோதனைச்
சாவடியொன்றின் மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம் அரசாங்கப் படையினர் அங்கிருந்து
தமது பீரங்கிகளை அகற்றியிருந்ததாக உக்ரேனிய படை வீரர் ஒருவர் தெரிவித்தார்.