புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2014


நெல்லை பா.ஜனதா மேயர் வேட்பாளர் வெள்ளையம்மாள், முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று அ.தி.மு.க.வில் இணைந்தார்.

இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவிக்கு பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த வெள்ளையம்மாள் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, அவரும், அவருடைய கணவரும், பா.ஜ.க. வர்த்தக பிரிவு மாநிலச் செயலாளருமான கணேச பெருமாள்ராஜா ஆகியோர் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தங்களை கழகத்தின் அடிப்படை உறுபபினர்களாக இணைத்துக் கொண்டனர்.

அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன், திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முத்துக்கருப்பன், எம்.பி., ஆகியோரும் உடன் இருந்தனர்.

சென்னை மாநகராட்சி 166–வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தவரும், மாநில செயற்குழு உறுப்பினருமான நீதி சேவியர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தன்னைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

அப்போது, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கட்ராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த புதுச்சேரி மாவட்டச் செயலாளர் மதியழகன், மாநில இளைஞர் அணிச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி (எ) மூர்த்தி, ம.தி.மு.க.வைச் சேர்ந்த அரியாங்குப்பம் தொகுதிச் செயலாளர் நடராஜன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப் பினரும், புதுச்சேரி மாநில மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான வழக்கறிஞர் கமலினி மற்றும் காந்தி ஆகியோர் முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தங்களைக் கழகத் தின் அடிப்படை உறுப் பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

அப்போது, புதுச்சேரி மாநிலக் கழகச் செயலாளர் புருஷோத்தமன், எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.

தேமுதிகவின் சேலம் கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் உமாராஜ் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

அப்போது, சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி உடன் இருந்தார்.

கடலூர் மாவட்ட முன்னாள் செயலாளர் ராமலிங்கம் மற்றும் அவருடைய மகன் கணேஷ் ஆகியோர் முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, தங்களைக் கழ கத்தின் அடிப்படை உறுப் பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

பல் வேறு கட்சிகளில் இருந்து விலகி கழகத்தில் இணைந்தவர்களுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கி வரவேற்றார்.

தாய் உள்ளத்தோடு தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டதற்காக, முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்" என்று கூறப்பட்டுள்ளது

ad

ad