புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2014

2ஜி வழக்கை சீர்குலைக்க சதித்திட்டம்; சி.பி.ஐ. இயக்குநர் மீது பரபரப்பு புகார்
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை டில்லி சி.பி.ஐ. நீதிமன்றில் நடந்து வருகிறது. விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்கா விசாரணையை சீர்குலைக்கும் வகையில் செயற்படுவதாகவும், எனவே அவரை நீக்க வேண்டும் என்றும் சட்டத்த ரணி பிரசாந்த் பூஷன் உயர் நீதிமன்றில்  மனுத்தாக்கல் செய்தார்.

இதற்கு ஆதாரமாக சி.பி. ஐ. இயக்குநரை சந்தித்த முக்கிய புள்ளிகளின் வருகைப் பதிவேடு பட்டியலையும் தாக்கல் செய்தார்.

இது 2ஜி வழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித்சின்கா உயர் நீதிமன்றில் ஆஜராகி புகாரை மறுத்தார்.

மேலும் பிரசாந்த் பூஷனுக்கு சி.பி.ஐ. இயக்குநரை சந்தித்தவர்களின் வருகைப் பதிவேடு கொடுத்தது யார் என்று சி.பி.ஐ. கேள்வி எழுப்பியது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரச சிறப்பு சட்டத்தரணி ஆனந்த்குரோவர் வாதாடுகையில், ‘‘சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித்சின்கா 2ஜி வழக்கில் தலையிடுவது சி.பி.ஐ. நிலைப்பாட்டுக்கு விரோதமானது.

ரஞ்சித் சின்காவின் நிலைப்பாடு 2ஜி வழக்கை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. அவரது நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டால் 2ஜி வழக்கை சீர்குலைத்து விடும்’’ என்றார்.

அப்போது நீதிமன்ற அறையில் சி.பி.ஐ. அதிகாரிகள் இருந்தனர். அவர்களை பார்த்து நீதிபதிகள், ‘‘நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள், உங்கள் அலுவலகம் சென்று பணியை கவனியுங்கள்’’ என்று உத்தரவிட்டனர்.

ரஞ்சித் சின்கா மீது அரச சட்டத்தரணி புகார் கூறிய போது இணை இயக்குநர் அசோக் திவாரி பதில் கூற முற்பட்டார்.

உடனே நீதிபதிகள் அவரைப் பார்த்து, ‘‘நீங்கள் சி.பி.ஐ. இயக்குநரின் முகவர் அல்ல. நீங்கள் உங்கள் கருத்துக்களை சொல்ல முடியாது’’ என்றனர்.

பின்னர் சட்டத்தரணி பிரசாந்த் பூஷன் மன்றில் கூறுகையில், நான் எந்த சி.பி.ஐ. அதிகாரியையும் சந்தித்து வருகைப் பதிவேடை பெறவில்லை’’ என்றார்.

சி.பி.ஐ. இயக்குநருக்கு எதிராக அதிகாரி யாராவது அங்கு இருப்பது தெரிய வந்தால் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சட்டத்தரணி கே.கே.வேணு கோபால் வாதாடுகையில்  தெரிவித்தார்.
 

ad

ad