புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2014

பிக்குகள் அரசியலில் ஈடுபடமுடியாது 
 ஏனைய மதங்களை அடக்கியாள்வதற்கும் அரசியலில் ஈடுபடவும் அரச நிர்வாகத்தில் ஈடுபடவும் பௌத்த பிக்குமாருக்கு உரிமை கிடையாது என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்தார்.

 
நாடாளுமன்றில்  நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுமம் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் மதங்களுக்கு எதிராக ஒரு சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை ஏற்கின்றேன். ஒரு சில விஷமிகள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.  அரச அமைப்பில் பௌத்த்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஏனைய மதங்களுக்கும் சுதந்திரமாக செயற்படக்கூடிய உரிமை வழங்கப்பட்டுள்ளது.
 
இதர மதங்களை அடக்கியாளும் உரிமை பௌத்தர்களுக்குக் கிடையாது. அதேவேளை துறவிகளாக இருக்கும் பிக்குமார் இன்று துறவறத்தை மறந்து அரசியலில் ஈடுபடுகின்றனர். ஒருசிலரே இவ்வாறு செயற்படுகின்றனர். எனவே அவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்றார்.

ad

ad