புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

21 நவ., 2014


சொந்த ஊருக்கு திரும்பிய 5 மீனவர்கள்! உறவினர்கள், தங்கச்சிமடம் மீனவர்கள் கண்ணீர் மல்க வரவேற்பு!
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 5 மீனவர்களும் சொந்த கிராமமான ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடத்திற்கு சென்றடைந்தனர். 

எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 பேரும் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு வந்தனர். அவர்கள் 5 பேரையும் உறவினர்களும், கிராம மக்களும் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

தூக்கு தண்டனையில் இருந்து மீண்டு 3 ஆண்டுகளுக்கு பின்னர் தங்களது சொந்த ஊருக்கு மீனவர்கள் திரும்பியுள்ளதால், தங்கச்சி மடம் பகுதியே உற்சாகத்தில் மிதந்தது.