மாணிக்கசோதியைக் கொன்றது யானையா ? டிப்பரா ? ; தொடரும் மர்மம்

முன்னணி அரசியல் கருத்தியலாளா் மாணிக்கசோதி அபிமன்னசிங்கம் திட்டமிட்டுக் கொலை செய்ய்பபட்டடிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
அண்மையில் இவா் கொழும்பில் இருந்து யாழ் வரும் போது ஏ-9 வீதியினில் பனிக்கன்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தார். இவா் பயணம் செய்த வாகனம் யானையுடன் மோதியதாலேயே விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்திருந்தனா்.
ஆனால் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இவரது வழங்கு விசாரணை நடைபெற்ற போது வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதியைக் குறுக்கு விசாரணை செய்யும் போது தவறான பக்கத்தால் வந்த வெள்ளை நிற டிப்பா் வாகனத்தினாலேயே விபத்து ஏற்பட்டது என தெரிவித்தார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது. குறித்த வழக்கு விசாரணையில் மாணிக்கசோதியின் சகோதரியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாந்தா அபிமன்னசிங்கம் ஆயராகி குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டார்.
வழக்கை விசாரித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மா.கணேசராஜா வாகனத்தை பிணைமுறியில் விடுவித்து வழக்கை அடுத்த தவணைக்கு ஒத்தி வைத்துள்ளார்.