புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2014

மைத்திரிபாலவின் ஊடகவியலாளர் சந்திப்பு பிற்போடப்பட்டது
அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மாலை வரை பிற்போடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இன்று மதியம் கொழும்பு நகர மண்டபத்தில் அமைச்சர் மைத்திரிபால கலந்து கொள்ளும் முக்கிய ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெறவிருந்தது.
இதற்காக வேறு நபரின் பெயரில் நகர மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான தகவல் அறிந்தவுடன் தற்போது கொழும்பு நகர மண்டப பகுதியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்கள் ஏராளமாகத் திரண்டுள்ளனர்.
எனினும் தவிர்க்க முடியாத காரணங்களால் குறித்த சந்திப்பு இன்று மாலை வரை பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில வேளை இந்த சந்திப்பு ரத்துச்செய்யப்படவும் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே தற்போது அலரி மாளிகைக்கு வரவழைக்கப்பட்டுள்ள அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமைச்சர் மைத்திரிபாலவின் மகள் பொலன்னறுவை பிரதேச வறிய இளைஞன் ஒருவனுடன் காதல் வயப்பட்டிருந்த நிலையில், குறித்த இளைஞன் இரவோடு இரவாக கடத்தி வரப்பட்டு பஸ்ஸில் மோதி படுகொலை செய்யப்பட்டிருந்தான்.
இந்த சம்பவத்தில் அமைச்சர் நேரடியாக தொடர்புபட்டிருப்பதாக 90களின் இறுதியில் பரபரப்பாக பேசப்பட்டிருந்தது.
மேலும் அமைச்சரின் மகனுக்கு எதிராகவும் கொலைக்குற்றச்சாட்டொன்று நிலுவையில் உள்ளது.
இது தொடர்பான கோப்புகள் மற்றும் மைத்திரிபால மகாவலி அமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சில் நடைபெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பான கோப்புகளும் தற்போது அலரிமாளிகை கலந்துரையாடல் அறை மேசை மீது வைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
எனினும் அமைச்சர் மைத்திரிபால மற்றும் ஜனாதிபதி இருவருக்குமிடையிலான கலந்துரையாடல் அறைக்குள் பசில் ராஜபக்ஷ, சுசில் பிரேம்ஜயந்த், டளஸ் அலஹப்பெரும, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

ad

ad