புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2014

தென் ஆப்பிரிக்க வீரர் மீது அவுஸ்திரேலிய ரசிகர்கள் நிறவெறி தாக்குதல்

கான்பெராவில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய ரசிகர்கள் தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிரை வரம்பு மீறி கேலி செய்துள்ளனர்.
இம்ரான் தாஹிர் பவுண்டரி அருகே களத்தடுப்பு செய்து கொண்டிருந்தார். இவருக்கு அடிக்கடி தனது தாடியைச் சொறியும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
இதனைக் கண்ட கான்பெரா ரசிகர்கள், அவரை கடுமையாக கேலி செய்தனர். நிறவெறித்தனம் அதில் ஊடுருவியிருந்ததாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று கூறியுள்ளது.
அதாவது, அவர் தாடியைச் சொறிவது பற்றி ரசிகர்கள் கேலிக்குரல் எழுப்பிக் கொண்டிருந்த போது திடீரென ஒரு ரசிகர், "உன்னுடைய செல்லப் பிராணியான ஒட்டகத்துக்கு சொறிந்து விட வேண்டியதுதானே?” என்று கேலி பேசியுள்ளார்.
இதனால் கடுப்பாகிப் போன இம்ரான் தாஹிர் அந்த ரசிகர் பக்கம் திரும்பி முறைத்தார். ஆனால் நடுவர்களிடம் அதிகாரபூர்வ புகார் எதனையும் அளிக்கவில்லை.
தொடர்ந்து பாகிஸ்தான் வம்சாவளி வீரர்கள் அல்லது பாகிஸ்தானிய வீரர்களை அவுஸ்திரேலிய ரசிகர்கள் நிறவெறி கேலிக்குட்படுத்தி வருவதும் கவலைக்குரிய அம்சம் என்றும் அந்த பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
இந்த போட்டியில் இம்ரான் தாஹிர் 6 ஓவர்கள் வீசி 40 ஓட்டங்கள் கொடுத்தார். ஆனால் காயம் காரணமாக துடுப்பெடுத்தாட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

ad

ad