புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2014

பார்த்தீனியம் பரம்பலை கட்டுப்படுத்துங்கள்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள  கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு அருகில் காணப்படும் பயிற்சி நிலைய வளாகத்திலும் வளாகத்திற்கு வெளிப்பகுதியிலும் பார்த்தீனியம் அதிகளவாக வளர்ந்து காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சகல இடங்களிலும் காணப்பட்ட பார்த்தீனியச் செடி கடந்த காலங்களில் அழிக்கப்பட்ட போதிலும் கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகத்திற்கு அருகாமையில் வளர்ந்துள்ள இச் செடியினை அழிப்பதற்கான நட வடிக்கை மேற்கொள்ளப்படாதது ஏன் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

வட மாகாண விவசாய அமைச்சினால் பார்த்தீனிய ஒழிப்புப்படை உருவாக்கப்பட்டு அதில் 300 பேர் இணைக்கப்பட்டு இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.

இதில் விவசாயிகளும் பொது அமைப்புக்களும் இராணுவத்தினரும் முனைப்பு காட் டியிருந்தனர் அத்துடன் விவசாயிகளின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இச்செடியானது சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும் விவசாய நிலங்களின் சத்துத் தன்மையை நீக்குகின்றது.

கடந்த காலங்களில் இச் செடி காணப்படும் இடங்கள் அழிக்கப்பட்ட போதிலும் அதன் பெருக்கம் இதுவரை குறையவில்லை.

இதே போன்று கரைச்சி பிரதேச சபை வளாகத்தினுள் ஆங்காங்கே பார்த்தீனியப் பரம்பலை காணக் கூடியதாகவுள்ளதாக பொது மக்களால் தெரிவிக்கப்படுகிறது.

இவ் விடத்தினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையயனின் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கிராமங்களில் இச்செடி மீண் டும் பரவ ஆரம்பித்துவிடும் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் பாரியளவிலான பார்த்தீனிய ஒழிப்பு நடவடிக்கையினையும் மேற்கொள்ள வேண்டி வரும்.

ஆகவே மாவட்ட செயலக வளாகம், அதன் முன் வளாகம், அரச மரக் கூட்டுத்தாபன முற்பகுதி, கரைச்சி பிரதேச சபை வளாகம்,  வளாகத்தின் வெளிப்பகுதி ஆகிய இடங்க ளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வருகை தந்து இதனை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.  
 

ad

ad