புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2014

வடக்கும் தெற்கும் நாடகம் வெற்றிகரமாக அரங்கேற்றம் .இலங்கை மீனவர்கள் மூவரையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை அமைச்சர் டக்ளஸ் உறுதி
போதைப் பொருள் கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் மூவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பேன் என அமைச்சர் டக் ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக இந்திய மீனவர்களுடன் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி நேற்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது.

யாழ் மாவட்ட மீனவர் அமைப்புக்களின் சமாசம் இதற்கான ஏற்பாட்டினை செய்திருந்தது.

யாழ் கண்டி வீதியில் அமைந்துள்ள மீனவர் அமைப்புக்களின் சமாசத் தலைமை அலுவலகத்தில் ஆரம்பமாகிய இந்தப் பேரணி, யாழ்ப்பாணம் ஸ்ரீதர் தியேட்டர் கட் டிடத் தொகுதியில் அமைந்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் சென்று ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட மகஜர் கையளிப்புடன் முடிவடைந்தது.

மூன்று மீனவர்களின் குடும்பத்தினர், அவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரை ஈபிடிபி கட்சியின் வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா பெற்றுக் கொண்டதுடன், மரண தண்டனை பெற்றுள்ள மீனவர்களின் மனைவியருடன் கொழும்பில் உள்ள அமைச்சர் தொலை பேசியில் உரையாடி ஆறுதல் கூறுவதற்கான வசதியையும் ஏற்படுத்தியிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சில்வஸ்திரி அலென்ரின் அங்கு சமுகமளித்திருந்தார்.

இந்த மீனவர்கள் தொடர்பாக ஜனாதிபதியுடன் நேரடியாகப் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தின ரிடம் உறுதியளித்துள்ளார்.

இந்திய பிரதமர் மோடி நேரடியாக ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டதற்கமையவே இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக கூறிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  இதில் இலங்கை மீனவர் விடயத்தில் இருக்கக் கூடிய சட்டப் பிரச்சினைகளை தீர்த்து அவர்களை நிச்சயமாக விடுவித்துத் தர முயற்சிப்பேன் என்று கூறினார்.

இதேவேளை இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் இலங்கை மீனவ குடும்பங்களின் அழுகுரல் இலங்கை அரசின் காதில் எட்டவில்லையா? மீனவர்கள் 3 பேரையும் விடுதலை செய்யவும்! இந்திய மீனவரின் மன்னிப்பை இலங்கை மீனவ ர்களிற்கு தாருங்கள்!, மீனவர்கள் 3 பேரையும் விடுதலை செய்யவும் என எழுதப்பட்ட பதாகைகளினையும் ஏந்தியிருந்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்த கொண்டிருந்த மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி களின் மனைவிமார் மற்றும் பிள்ளைகள் கதறிய ழுதமை அனைவரின் நெஞ்சினை யும் கனக்க வைத்தது.
 

ad

ad