ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அரசியல் விவகாரப் பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
இன்று மாலை இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இரு தரப்பு விவகாரங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இன்று இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பெல்ட்மன், எதிர்வரும் 3ம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார்.
பெல்ட்மன் நாட்டின் பல அரசியல் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்