புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 பிப்., 2015

காணி அமைச்சு மு.காவுக்கு; முடிவுக்கு வந்தது இழுபறி


கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் நியமனத்தில் கூட்டமைப்புக்குப் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. கல்வி மற்றும் காணி அமைச்சு கூட்டமைப்புக்கு
வழங்கப்படாமையே ஏமாற்றத்துக்குக் காரணம். இந்த முக்கிய அமைச்சைப் பொறுப்பேற்பது எனக் கூட்டமைப்பு முடிவு செய்திருந்த நிலையில் அது அந்தக் கட்சிக்கு வழங்கப்படவில்லை.
 
கிழக்கு மாகாண சபையின் கல்வி மற்றும் காணி அமைச்சை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஆரியவதி கலப்பதி கல்வி மற்றும் காணி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண அமைச்சர் பதவிகளுக்கு சீ.தண்டாயுதபாணி மற்றும் கே.துரைராஜசிங்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். 
 
இதற்கமைய கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சீ. தண்டாயுத பாணியைக் கல்வி மற்றும் காணி அமைச்சராகவும், மாகாணசபை உறுப்பினர் கே.துரைராஜசிங்கத்தை விவசாய கால்நடை மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அமைச் சராகவும் நியமிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருந்தது.
 
இந்த நிலையில் நேற்றுக் கிழக்கு மாகாண கல்வி மற்றும் காணி அமைச்சராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஆரியவதி கலப்பதியும், வீதி அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக எம். ஐ.எம். மன்சூரும் சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர். 
 
இவர்கள் இருவரும் நேற்றுக் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தனர்.
 
இதேவேளை, கிழக்கு மாகாண சபையில் மீதமுள்ள விவசாயம் மற்றும் சுகாதாரம் ஆகிய இரு அமைச்சுக்களும் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட வுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் பிரசன்ன இந்திரகுமார் சபையின் பிரதித் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ad

ad