புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 பிப்., 2015

கச்சதீவு திருவிழாவுக்கு செல்ல புங்குடுதீவு குறிகட்டுவானில் மக்கள் வெள்ளம்

கச்சதீவு பெருவிழா ஆரம்பம் : படையெடுக்கும் பக்தர் கோடிகள் கச்சதீவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட படகுகள் : காத்திருக்கும் மக்கள் 

கச்சதீவு செல்வதற்கான பதிவு செய்யப்பட்ட படகுகள் குறைவாக இருப்பதால் 200க்கு மேற்பட்ட மக்கள் குறிகட்டுவானில் படகுகளுக்காக காத்திருக்கின்றனர்.
 
இதுவரையில் 700க்கு அதிகமான மக்கள் பதிவு செய்யப்பட்ட 5 படகுகள் மூலம்  சென்று விட்டனர் எனினும் மீதமுள்ள 200க்கு  அதிகமான மக்கள் குறிகட்டுவானிலேயே காத்திருக்கின்றனர்.
 
இதேவேளை படகு மூலம் கச்சதீவு செல்வதற்கு மாத்திரம் 5 மணித்தியாலங்கள் தேவை அதுவரையிலும் மக்கள் காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது.

கச்சதீவு பெருவிழா இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
 
 
இந்த நிலையில் கச்சதீவுப் பெருவிழாவிற்காக குறிகட்டுவானில் இருந்து படையெடுத்து வருகின்றனர் 700 க்கு மேற்பட்ட பக்தர் கோடிகள்

ad

ad