போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி சுவிட்சர்லாந்து செல்ல முயற்சித்த இலங்கையர்கள் அபுதாபியில் வைத்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து அபுதாபி சென்று அங்கிருந்து சுவிட்சர்லாந்து செல்ல மூன்று இளைஞர்கள் முயற்சித்துள்ளனர்.
வடக்கைச் சேர்ந்த மூன்று இளைஞர்களும் அவர்களை அனுப்பி வைக்க முயற்சித்த முகவரையும் அபுதாபி குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தினர் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர்.
உத்தியோகபூர்வ கடவுச்சீட்டை பயன்படுத்தி இவர்கள் அபுதாபி சென்றுள்ளனர். அதன் பின்னர் போலியான கடவுச்சீட்டுக்களையும், வீசாக்களையும் பயன்படுத்தி அபுதாபியிலிருந்து சுவிட்சர்லாந்து செல்ல முயற்சித்துள்ளனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்124 ரக விமானத்தின் ஊடாக இவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.