புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 பிப்., 2015

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை அதிரடியாக முற்றுகையிட்ட கோர்ட் ஊழியர்கள்

தமிழக முழுவதிலுமிருந்து அனைத்து மாவட்ட கோர்ட் ஊழியர்கள் சுமார் 300 பேர் திடீரென்று இன்று மாலை 6.30 மணியளவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிட்டனர். போலீஸ் குவிக்கப்பட்டதால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ”எங்களை கடந்த 2009 ஆம் ஆண்டு அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் கோர்ட்டில் பல்வேறு பணிக்கு தேர்வு செய்தனர். ஆனால் இதுவரை எங்கள் யாரையும் நிரந்தரம் செய்யவில்லை. தற்காலிகமாகவே வைத்திருக்கின்றனர். இடையே ஆண்டுக்கு ஒருமுறை மாதகணக்கில் கட்டாயவிடுப்பில் வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர்.

தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்களை பணியில் சேர்த்துக் கொண்டு எங்களை பணியில் நீக்கி வருகின்றனர். இது எந்தவிதத்தில் நியாயம்?

எங்களுக்கும் தகுதி தேர்வு வைத்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க வந்தோம். ஆனால் எங்களை  உள்ளே விடாமல் அதிகாரிகள் தடுத்துவிட்டனர். எனவே முதல்வர் எங்கள் கோரிக்கையை ஏற்று உடனே இதற்கு தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்”  என்றனர். 

பின்னர் அவர்களை போலீஸார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

ad

ad