ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
பெற்றது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக கோப்பை லீக் போட்டி ஆக்லாந்தில் நடந்தது. 'டாஸ்' வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு பிராட் ஹாடின் (43), டேவிட் வார்னர் (34), ஷேன் வாட்சன் (23) கைகொடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 32.2 ஓவரில் 151 ரன்களுக்கு சுருண்டது. நியூசிலாந்து சார்பில் டிரண்ட் பவுல்ட் 5 விக்கெட் கைப்பற்றினார். சுலப இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் பிரண்டன் மெக்கலம், 21 பந்தில் 50 ரன்கள் எடுத்து கைகொடுத்தார். பின் கோரி ஆண்டர்சன் (26), வில்லியம்சன் (45*) ஜோடி கைகொடுக்க, நியூசிலாந்து அணி 23.1 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.