புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 பிப்., 2015

ஜூன் மாதம் பொதுத் தேர்தல்

எதிர்வரும் ஜூன் மாதம் பொதுத் தேர்தலை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டம்
பூர்த்தியாகவிட்டாலும், பூர்த்தியாகினாலும் தேர்தலை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தரப்பிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பிற்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
நூறு நாள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கைகளுக்கு சுதந்திரக் கட்சி ஆதரவளித்தாலும் இல்லாவிட்டாலும் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமென பிரதமர், ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்துள்ளார்.

ad

ad