புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2015

சூடு பிடிக்கும் சுவிஸ் நாடாளுமன்ற தேர்தல்: ஆளுங்கட்சிக்கு உருவான புதிய நெருக்கடி

சுவிட்சர்லாந்து நாட்டில் எதிர்வரும் அக்டோபர் 18ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதையை கூட்டணி கட்சியால்
மத்திய அரசு ஆட்சியை பிடிப்பதில் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் தற்போது, சமூக ஜனநாயக கட்சி, சுவிஸ் மக்கள் கட்சி உள்ளிட்ட 5 கட்சிகளின் அமைச்சரவைகளை கொண்ட கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டணியில் ஒரு அதிபர் உள்பட 6 அமைச்சர்கள் அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர்.
சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்த Simonetta Sommaruga என்பவர் அரசாங்க அதிபராகவும் நீதித்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வருகிறார்.
மேலும், சமூக ஜனநாயக கட்சிக்கு அதிபர் பதவி தவிர்த்து கூடுதலாக ஒரு அமைச்சரவை (உள்விவகாரத்துறை) பதவியும் பெற்று ஆட்சி புரிந்து வருகிறது.
சுவிஸ் நாட்டில் சமூக ஜனநாயக கட்சியை போல அதிக மக்கள் செல்வாக்கு பெற்ற மற்றொரு கட்சி சுவிஸ் மக்கள் கட்சி (SVP) ஆகும்.
ஆனால், அதிக பெரும்பான்மை இருந்தும் இந்த கட்சிக்கு ஒரு அமைச்சரவை (உள்துறை அமைச்சகம்) மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த சுவிஸ் மக்கள் கட்சி தான் தற்போது ஆளும் கூட்டணி கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சுவிஸ் மக்கள் கட்சியின் துணை தலைவரும், லூசெர்ன் மண்டலத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான Felix Muri நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில், சுவிஸ் மக்கள் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு அமைச்சரவை சேர்த்து கூடுதலாக மற்றொரு அமைச்சரவையும் வழங்க வேண்டும்.
அவ்வாறு கூடுதல் அமைச்சரவை அளிக்காவிட்டால், கூட்டணி ஆட்சியில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சியாக செயல்பட நேரிடும் என அதிரடியாக தெரிவித்துள்ளது பிற கூட்டணி கட்சிகளுக்கு தலைவலியாக மாறியுள்ளது.
சுவிஸ் மக்கள் கட்சி எதிர்க்கட்சியாக மாறினால், தற்போது ஆட்சியில் உள்ள சமூக ஜனநாயக கட்சி மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகும் என பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

ad

ad