13 அக்., 2015

யாழ்.மாட்ட ஆசிரியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு கல்வி வலய, யாழ். மாவட்ட ஆசிரியர்கள் இன்று வடமாகாண கல்வி அமைச்சின் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நீண்டகாலம் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் பணியாற்றிவரும் இவர்கள், தங்களது இடமாற்றத்தை வலியுறுத்தியே குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
முல்லைத்தீவு கல்வி வலயத்தில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 55 ஆசிரியர்கள் நீண்டகாலமாக கடமையாற்றி வருகின்றனர். இவர்களுள் 22 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட போதிலும், ஏனைய 33 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தமக்கு மாகாண கல்வியமைச்சு இடமாற்றம் வழங்கிய போதும் வலயக்கல்வி திணைக்களம் இடமாற்றத்தை வழங்காமைக்கு நியாயம் கேட்டு குறித்த ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடத்தினர்.
எனினும் குறித்த ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.