13 அக்., 2015

புங்குடுதீவு ஈஸ்ரன் விளையாட்டுக்கழகத்தின் உதைபந்தாட்ட திருவிழா

 புங்குடுதீவு ஈஸ்ரன் விளையாட்டுக்கழகத்தின் மறைந்த அதிபர் சதாசிவம் கணேஸ்வரன் (புங்குடுதீவு மகாவித்தியாலயம்) அவர்களின் நினைவாகபுங்குடுதீவு ஈஸ்ரன் விளையாட்டுக்கழகத்தின் மறைந்த அதிபர் சதாசிவம் கணேஸ்வரன் (புங்குடுதீவு மகாவித்தியாலயம்) அவர்களின் நினைவாக
மாபெரும் உதைபந்தாட்ட திருவிழா
புங்குடுதீவு ஈஸ்ரன் விளையாட்டுக்கழகம் மகாவித்தியாலய அதிபர் சதாPungudutivu-1சிவம் கணேஸ்வரன் அவர்களின் நினைவாக தீவக விளையாட்டுக்கழகங்களுக்கிடையேயான விலகல் முறையில் உதைபந்தாட்டப்போட்டியையும், புங்குடுதீவு பாடசாலை களுக்கிடையேயான மாணவர்களுக்குமான மாபெரும் உதைபந்தாட்டப் போட்டியை 09.10.2015- 11.10.2015 வரை நடாத்தியது. ஈஸ்ரன் வியையாட்டுக்கழகமானது புங்குடுதீவு கிழக்குப் பகுதியை பிரதிநிதப்படுத்தும் அணியாகும். இக்கழகம் 1991 இற்குப் பின் கழக உறுப்பினர்கள், பிரதேச மக்கள் இடம்பெயர்ந்து சென்ற பின் மீண்டும் இருப்பவர்களின் துணை கொண்டு அணி உருவாக்கப்பட்டு புலம் பெயர் எமது மக்களின் துணையுடன் முதன்முதலாக உதைபந்தாட்ட போட்டியை பல இன்னல்களின் மத்தியிலும் நடாத்தி முடித்துள்ளது.
17 தீவுப்பகுதி கழகங்கள் போட்டியில் பங்குபற்றியிருந்தன. ஆரம்பத்தில் புங்குடுதீவு மகாவித்தியாலத்தில் நடாத்த ஏற்பாடாகியிருந்த போதிலும் இறுதியில் புங்குடுதீவு நசரெத் விளையாட்டுத்திடலில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வுக்கு பல ஆசிரியர்கள் முன்னின்று விளையாட்டினை திறம்பட நடாத்தி வைத்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஈஸ்ரன் விளையாட்டுக்கழக தலைவர் க. ஸ்ரீரமணன் , விளையாட்டுத்தலைவர் ஞா. தினேஸ்வரன் போட்டி ஒருங்கிணைப்பாளர் சி.பரரூபன், ஜெ.காளிதாஸ், ஜெ.ஜதீசன் அகியோரின் ஏற்பாட்டில் கழகத்தின் செயலாளர் யோ. காந்தி ஆகியோரின் முயற்சியால் போட்டி சிறப்பாக நடாத்தப்பட்டது.
நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக புங்குடுதீவின் புகழ் பூத்த வைத்தியர் கணேஸ் அவர்களின் புதல்வன் வைத்திய கலாநதி க.ஸ்ரீதரன் அவர்களும் கௌரவ விருந்தினராக புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் முதன்முதலாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவான ப.சுந்தரலிங்கம் முன்னாள் இலங்கை திட்டமிடல் பணிப்பாளர் திருகோணமலை அவர்களும், க. தர்மகுணசிங்கம் முன்னாள் அதிபர் புங் மகாவித்தியாலயம், சிறப்பு விருந்தினராக புங்குடுதீவு சர்வோதயம் நிர்வாக இயக்குநர் பொ. ஜமுனாதேவி திருமதி சி. இராசரத்தினம் அதிபர் புங் கமலாம்பிகை வித்தியாலயம், இ.திலீபன் அதிபர் புங் சித்திவிநாயகர் மகா வித்தியாலயம், புங் கடற்படைத்தளபதி சில்வா அவர்களும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர். நிகழ்வில் புங்குடுதீவு, நயினாதீவு, வேலணை,தம்பாட்டி, ஊர்காவற்றுறை போன்ற பிரதேசங்களில் இருந்து 17 அணிகள் போட்டியிட்டு அரையிறுதியில் நசரத் அணியை நண்பர்கள் அணி வெற்றி கொண்டு இறுதி போட்டிக்கு தெரிவாகியது. மற்றுமொரு அரையிறுதியில் நயினாதீவு அண்ணா அணியை எதிர்த்து ஊர்காவற்றுறை சென் ஜேம்ஸ் அணி ஆடி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது.
இறுதிப்போட்டியை பிரதம விருந்தினர், கௌரவ விருந்தினர்,சிறப்பு விருந்தினர் ஆரம்பித்து வைத்தனர். போட்டி தொடங்கி விறுவிறுப்பாக இருந்த போது ஊர்காவற்றுறை அணி முதலில் ஒரு கோலை போட ஆட்டம் இன்னும் விறுவிறுப்படைந்து அடுத்த நிமிடம் புங்குடுதீவு நண்பர்கள் அணி அடுத்து கோலை போட ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியது. பின்னர் சிறந்த நுட்பத்தை பயன்படுத்தி ஊர்காவற்றுறை அணி மீண்டும் ஒரு கோலை போட்டு சம்பியனாகியது.
தொடர்ந்து விருந்தினர் உரை நிகந்தது. பிரதம விருந்தினர் உரையில் அதிபரின் ஞாபகார்த்த போட்டி மகாவித்தியாலயத்தில் நடைபெற்றிருக்க வேண்டும் என்றும் அதற்கு தடங்கலாக மகாவித்தியாலய அதிபரோ அல்லது தீவக வலயப்பணிப்பாளரோ நடந்து கொண்டிருந்தால் அது மன்னிக்க முடியாது என்றும் புங்குடுதீவு மகாவித்தியலய மைதானம் முற்றுமுழுதாக புங்குடுதீவு வெளிநாட்டில் உள்ளவர்களாலும், உள்ளுரில் உள்ளவர்களாலும் நிர்மாணிக்கப்பட்டது இதில் புங்குடுதீவில் உள்ள எந்த பிரயையும் அனுபவி்க்க பூரண உரிமை உண்டு எனவும் அதற்கு தடங்கலாக இருந்தால் அதற்கு வடமாகாண கல்வி அமைச்சர் தலையிட்டு அந்த உரிமையை வழங்க வேண்டும் எனவும் கண்டிப்பாக குறிப்பிட்டார்.
விளையாட்டின் மூலம் தலைமைத்துவம், ஒற்றமை, மற்றவர்களை மதிக்கும் தன்மை, என்பன உருவாகுவதோடு ஆரோக்கிய சமூகம் உருவாக வாய்ப்பு கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார். மிகவும் சிறப்பாக நடந்த உதைபந்தாட்ட நிகழ்வில் பாடசாலை மட்டத்தில் புங் மகாவித்தியாலயம் சம்பியன் பட்டத்தை பெற்றதுடன் அடுத்ததாக புங் சித்திவிநாயகர் பாடசாலை வந்தமையும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கழகத்தின் செயலாளர் எல்லோரிடமும் மறைந்த அதிபரின் ஞபகார்த்தமாக புங் மகாவித்தியாலயத்தில் சிறந்த நூல் நிலையம் அமைய வேண்டும் என்றும் அது மறைந்த அதிபரின் நீண்ட நாள் ஆசை எனவும் புலம்பெயர்ந்த மக்களுக்கு இது ஒரு சிறிய விடயம் என்றும் இதனை யாராவது சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்பதும், இன்று புங்குடுதீவுக்கு அரை மணிநேரத்தில் பயணம் செய்வதென்றால் பெரியவாணர், சின்னவாணர் என்பவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். எனவே இவர்கள் புங்குடுதீவு ஆரம்பிக்கும் இடத்தில் புங்குடுதீவு வரவேற்கிறது என்ற வகையில் இரு சிலைகள் நிறுவப்படும் பட்சத்தில் அவர்களை நினைவு கூர முடியும். இந்த கைங்கரியங்கள் நிறைவேறுமா? பொறுத்திருந்து பார்ப்பபோம்.