13 அக்., 2015

நலமுடன் உள்ளேன்: நடிகை கே.ஆர்.விஜயா
தனது உடல் நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களை மறுத்துள்ள பிரபல நடிகை கே.ஆர்.விஜயா, ஏராளமான நடிகர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதாகவும், தான் நலமுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் இருக்கும் அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில், 

எல்லாருக்கும் வணக்கம். நான் கே.ஆர்.விஜயா பேசுகிறேன். நேற்றிலிருந்து (ஞாயிறு) ஒரு புரளி வந்துகொண்டிருக்கிறது. உடல் நிலை சரியில்லை. விபத்து ஏற்பட்டது என்று. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நான் பெரியவர்களின் ஆசிர்வாதத்துடனும், மக்களின் ஆசிர்வாதத்துடனும் நல்லா இருக்கிறேன். யார் இந்த புரளியை கிளப்பிவிட்டது என்று தெரியவில்லை. நிறைய நடிகர், நடிகைகள் எனக்கு போன் செய்து அம்மா நல்லா இருக்கீங்களா என்று கேட்கிறார்கள். பரவாயில்லை என் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்ற சந்தோசம் வருகிறது. எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் அடிக்கடி கேரளா வருவோம். வேறு எந்த காரணமும் கிடையாது. குழந்தைகள் கூட இருந்தால் நல்லதுதானே. ஆட்சி (மனோரமா) மறைவுக்கு வந்து என்னால் அஞ்சலி செலுத்த முடியவில்லை. மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஒரு சகோதரி மாதிரி பழகுவார். பெரிய நடிகை. நடிகர் திலகத்திற்கு பிறகு அவர்தான். நன்றி வணக்கம்.