13 அக்., 2015

வித்தியா கொலை வழக்கு! நீதவானின் அறையில் இரகசிய சாட்சியம்


யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் முக்கிய சாட்சியம் ஒன்று இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில், நீதவான் அறையில் இரகசியமாக பெறப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் குறித்த வழக்கை விசாரித்த நீதவான், சந்தேக நபர்களை எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை, சந்தேகநபர்கள் தமது வழக்கை துரிதமாக விசாரிக்குமாறு நீதிபதியிடம் கேட்டுக் கொண்டனர்.
இதற்கு பதிலளித்த நீதிபதி, அதனை பொலிஸார் பார்த்துக் கொள்வார் என கூறினார்.
சந்தேகநபர்கள் சார்பில் வழக்கமாக ஆஜராகும் வழக்கறிஞர் (சிங்கள) இன்றும் ஆஜராகியிருந்தார்.
இதனையடுத்து குறித்த வழக்கு தொடர்பான முக்கியமான சாட்சி இன்றைய தினம் மிக இரகசியமான முறையில் பெறப்பட்டுள்ளது.