13 அக்., 2015

மஹிந்த மற்றும் கோத்தபாயவின் பிரஜாவுரிமையை நீக்க முயற்சி?


யுத்த குற்ற விசாரணைகள் என்ற போர்வையின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரின் பிரஜா உரிமையை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மினுவங்கொட பிரதேசத்தில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் அதிகாரச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனச்சாட்சியுள்ள மக்களாக அதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாதென அவர் கூறியுள்ளார்.
தீவிரவாதத்தை தோற்கடித்த தலைவரை எப்பொழுதும் பாதுகாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.