13 அக்., 2015

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரத போராட்டம் யாழில்

வடமாகாண  இளையோர் அமைப்பால் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரத போராட்டம்
நல்லூர் முன்றலில் காலை 8மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது
குறித்த போராட்டத்தில் யாழ் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்,வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், வடமாகாணசபை உறுப்பினர்களான சுகிர்தன், கஜதீபன், பரஞ்சோதி , அஸ்மின், மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான தவராசா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை அரசியல் கைதிகள் தமது உண்ணாவிரத போரட்டத்தை நேற்று ஆரம்பித்து இன்று 2ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.