புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2015

யாழ். பருத்தித்துறைக் கடலில் படகு கவிழ்ந்து இரு மீனவர்கள் பலி

யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காகச் சென்ற போது படகு கவிழ்ந்ததில் இரு
மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
பருத்தித்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக படகு ஒன்றில் மூன்று மீனவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். கடும்காற்றுடன் கூடிய மழை கடற்கொந்தளிப்புக் காரணமாக இவர்களின் படகு கவிழ்ந்துள்ளது. இதில் ஒருவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டார். ஒருவர் நீந்திக் கரைசேர்ந்தார். மற்றயவர் கடல் அலையில் அடித்துச் செல்லும்போது சக மீனவர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டவரின் சடலத்தை தேடும் பணி தொடர்கிறது. எஸ்.ஜோர்ஜ் (வயது 45), அந்தோனிமுத்து ஜெனிபட் (வயது 34) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.
மேலும் மரண விசாரணையை பருத்தித்துறை பதில் நீதிவான் பா.சுப்பிரமணியம் மேற்கொண்டார்.

ad

ad