தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சம்பந்தமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
புளொட் அமைப்பின் தலைவரான சித்தார்த்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் அனுமதியின்றி அந்த பேரவையின் கூட்டத்தில் கலந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வடக்கு முதலமைச்சர் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை, தமிழ் மக்களுக்கு ஏதுவான பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து வருகிறது