புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2015

தற்­போ­தய கால­கட்­டத்தில் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கு மாற்­றீ­டாக எந்த அமைப்­பு­களை உரு­வாக்­கி­னாலும் அது கிழக்கு மாகா­ணத்­திற்கு சாபக்­கேடே-பாக்­கி­ய­செல்வம் அரி­ய­நேத்­திரன்

தற்­போ­தய கால­கட்­டத்தில் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கு மாற்­றீ­டாக எந்த அமைப்­பு­களை உரு­வாக்­கி­னாலும் அது கிழக்கு
மாகா­ணத்­திற்கு சாபக்­கேடே என தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பாக்­கி­ய­செல்வம் அரி­ய­நேத்­திரன் தெரி­வித்தார்.
தமது அலு­வ­ல­கத்தில் தற்­போ­தய புதி­ய அ­மைப்பு யாழ்­பா­ணத்தில் உரு­வாக்­கப்­பட்­டமை தொடர்­பாக ஆத­ர­வா­ளர்கள் மத்­தியில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கை யில்,
தற்­போ­த­ய­நி­லையில் ஒவ்­வொரு தமிழ்­ம­கனும் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பை பலப்­ப­டுத்த வேண்­டுமே தவிர பல­வீ­னப்­ப­டுத்­த­கூ­டாது.தேர்­தலில் இம்­முறை நான் வெற்­றி­பெ­ற­வில்லை என்­ப­தற்­காக அல்­லது தேசி­ய­பட்­டி­யல்­உ­றுப்­பு­ரிமை சம்­பந்தர் எனக்கு தர­வில்லை என்­ப­தற்­காக அல்­லது ஒருவர் இரு­வர்­ மு­டி­வு­களை எடுக்­கி­றார்கள் என்­ப­தற்­காக நான் வேறு அமைப்­புக்­களில் இணை­வதோ அல்­லது தமிழ்­தே­சி­ய­கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­க­செ­யல்­ப­டு­வதோ எனது நோக்­க­மில்லை.
குறிப்­பாக கிழக்கு மாகா­ண­மக்கள் எச்­ச­ரிக்­கை­யுடன் செயல்­ப­ட­வேண்டும்.வட­கி­ழக்­கு­தா­யகம் என்­பது மறுக்க முடியா உண்மை அதில் வட­மாகா ணத்தில் உள்ள தற்­போ­தய நிலை­க­ளுடன் கிழக்கு மாகா­ணத்தை புவியியல் ரீதி­யா­கவும் இனப்­ப­ரம்பல் ரீதி­யா­கவும் ஒப்­பி­ட­மு­டி­யாது.
2009க்கு முன்­னுள்ள நிலை­மையை விடவும் கிழக்­கு­ மா­காணம் சிங்­கள மக்­க­ளாலும் இஸ்­லா­மிய அர­சி­யல்­வா­தி­க­ளாலும் பார­தூ­ர­மாக திட்­ட­மிட்ட காணி அப­க­ரிப்­புக்கள் சிலு சிலுப்­புகள் இன்றி பறி­போய்க்­கொண்­டி­ருக்­கின்­றது.
வேலை­வாய்ப்பில் தமி­ழர்கள் ஓரம் கட்­டப்­ப­டு­கி­றார்கள் தற்­போது மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 75வீத­மான தமி­ழர்கள் நிறைந்த மாவட்­டத்தில் மாவட்ட இணைத்­த­லை­வ­ராக மூன்று முஸ்லிம் உறுப்­பி­னர்­க ளும் ஒரு தமி­ழரும் நிய­மிக்­கப்­பட்­ட­நி­லை யில் இன்னும் பல ஆபத்­துக்களை எதிர்­நோக்­க­வேண்டி வரும்.
தமிழ்­தே­சி­ய­கூட்­ட­மைப்பு எடுக்கும் அர­சியல் தீர்வு விட­யத்­திற்கு குறிப்­பாக கிழக்­கில்­உள்ள அனை­வரும் ஆத­ரவு கொடுக்­க­வேண்டும். அதை விடுத்து இன்னும் ஒரு மாற்­றுத்­த­லை­மைக்கு பின்னால் செல்­வது கிழக்­குத்­த­மி­ழர்­க­ளா­கிய நாம் எமது தலை யில் நாமே மண்ணை போடு­வ­தற்கு ஒப்­பாகும்.
வட­மா­கா­ணத்தை பொறுத்த மட்டில் இன்னும் பத்­து­வ­ருடம் அர­சி­யல்­தீர்வு இல்­லாமல் இப்­ப­டியே இருந்­தாலும் அவர்­க­ளுக்கு பெரி­ய­ அ­ள­வில்­பா­திப்­புக்கள் இல்லை. இதனால் யாரும் நான் பிர­தே­ச­வாதம் பேசு­வ­தாக நினைத்தால் அதுஅவர்கள் மடமைத்தனமும் கிழக்குமாகாணம் தொடர்பான சரியான விளக்கம் இல்லாதவர்களேயாகும்.
கடந்தமுப்பது வருடஅகிம்சைப் போராட்டகால அரசியலை தலைமையேற்று நடத்திய தந்தை செல் வாவாக இருக்கலாம், அதன்பின் ஆயுதப்போரா ட்டத்தை முப்பது வருடம் தலைமையேற்று வழி நடத்திய தலைவர் பிரபாகரனாக இருக்கலாம் பல கட்டங்களில் அவர்­க­ளுக்கு கிழக்கு மாகா­ணத்தை விட்டு வட­மா­கா­ணத்தை மட்டும் எடுத்து தனி­யாக ஆட்சி செய்­யு­மாறு அந்­தந்த காலக்­கட்­டங்­களில் இருந்த சிங்­கள தலை­வர்கள் கேட்­ட­போதும் தாம்­கி­ழக்கு மாகா­ணத்தை விட்டு எந்த தீர்­வை­யும்­பெ­ற­மாட்டோம் என உறு­தி­யாக கூறி இருந்­தனர்.
எப்­போதும் வடக்கில் இருந்து கிழக்கு மாகாணம் பிரி­யக்­கூ­டாது என்ற நிலைப்­பாட்டின் அடிப்­ப­டை­யில்தான் எமது தலை­வர்கள் செயல்­பட்­டனர்.
தற்­போது இரா­ஜதந்­திர அர­சியல் தலை­மையை ஏற்­றுள்ள சம்­பந்­தனும் வட­கி­ழக்கு இணைந்த அர­சியல் தீர்வில் இருந்து தடம்­மா­ற­வில்லை. எதிர்­வரும் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 31க்குள் அர­சியல் தீர்வு கிடைக்கும் என உறு­தி­யுடன் தமது செயல்­பாட்டை முன் எடுக்கும் போது அதற்கு மாற்­றீ­டாக வேறு ஒரு பெய­ரில்­அ­மைப்­புக்கள் ஏற்­ப­டுத்­து­வது இன்னும் காலத்தை இழுத்­த­டிக்­குமே தவிர அதனால் அடையும் லாபம் அர­சாங்­கத்­திற்கு லாப­மா­க­மட்டும் இருக்கும் எமக்கு எந்த நன்­மையும் ஏற்­ப­டாது.
காலம் கடக்­கும்­போது நில அப­க­ரிப்பும் வேலை­வாய்­ப்பின்மை, கலா­சா­ர­சீர்­கேடு, திட்­ட­மிட்­ட­கு­டி­யேற்றம் எல்­லாமே வட ­மா­கா­ணத்­தை­வி­டவும் கிழ க்­கு­ மா­கா­ணத்தில் சத்­த­மின்றி நிறை­வேறும். இந்த யதார்த்­தத்தை எந்­த­ள­வுக்கு விளங்கிக் கொள்­வார்கள் எனத் தெரி­யாது. ஆனால்­ வ­ட­மா­காண முதல்வர். விக்­கி­னேஸ்­வரனும் சம்­பந்தனும் இந்த இக்­கட்­டான உண்­மை­களை விளங்கி இருவரும் சட்டத்தரணி கனகஈஸ்வரன் ஏற்பாட்டில் ஒரு மனம் திறந்த பேச்சு வார்த்தையை நடத்தி இருப்பது காலத்தின் தேவை யாகும் என்றார்.

ad

ad