புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2015

கூட்டணிக்கு அழைப்பு விடும்போது காங்கிரஸை விலக்க மாட்டோம்: கருணாநிதி

சட்டப்பேரவை தேர்தலின் போது கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் போது, காங்கிரஸ் கட்சியை விலக்கிட மாட்டோம்
என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி கூறினார்.
சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
மூன்றாண்டுகள் தொடர்ந்து ஒரே பதவியில் இருக்கும் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழகத் தேர்தல் அதிகாரியின் உத்தரவு குறித்து பதிலளித்த கருணாநிதி, ஜனநாயகம் பழுதுபடாமல் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தான் தனது கருத்து என்றார்.
தமிழ்நாட்டில் தொழில் வளர்ந்திடவும், ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதிலும், எல்லா மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக விளங்க வேண்டும். அதற்கேற்ற வகையில் தமிழ்நாட்டிலே உள்ள ஏழை, எளிய மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும் வகையிலும், வணிகப் பெருமக்களுக்கும் மற்றும் பல்வேறு தரப்பட்ட மக்களுக்கும் உதவிடும் வகையிலும் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
தேமுதிகவுக்கு கூட்டணியில் சேர அழைப்பு விடுத்தது போல காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடும் போது காங்கிரசை விலக்கி விட மாட்டோம் என்றார்.

ad

ad