புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2015

புங்குடுதீவு- அனலைதீவு இடையில் பயணித்த நோயாளர் காவு படகு கடலில் மூழ்கியது!

யாழ்.புங்குடுதீவு- அனலைதீவு இடையே சேவையில் ஈடுபட்டுருந்த நோயாளர் காவு படகு கடலில் வீசீய காற்றின் காரணமாக கடலில் மூழ்கியது.
வடமாகாண சுகாதார அமைச்சினால் யாழ்.புங்குடுதீவு- அனலைதீவு இடையில் நோயாளர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட அம்புலன்ஸ் படகு இன்றைய தினம் காலை கடல் கொந்தளிப்பினால் கடலில் மூழ்கியுள்ளது.
யாழ். மற்றும் அனலைதீவு இடையே இடம்பெறும் போக்குவரத்தினால் நோயாளர்கள் எதிர்நோக்கும் இடையூறுகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து குறித்த படகு அண்மையில் சுகாதார அமைச்சினால் வட மாகாணசபைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்து.
இருப்பினும் குறித்த படகு விபத்திற்கு உள்ளானதால் இத்தீவிற்கு நோயாளர் படகு சேவை பாதிப்படைந்துள்ளது.

ad

ad