புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 பிப்., 2016

ஏலத்தில் என்ன நடந்தது?- ஐ.பி.எல் 'லக்கிமேன்' முருகன் அஸ்வின் பேட்டி

ரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட்  வீரர் முருகன் அஸ்வின் புனே அணிக்காக ரூ.
4.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவரது அடிப்படை விலை ரூ.10 லட்சம்தான். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டு வியப்பை ஏற்படுத்தியுள்ளார். ஐ.பி.எல். என்ட்ரி குறித்து அவர் அளித்த பேட்டி இங்கே...

ஐ.பி.எல். ஏலத்தில் என்ன நடந்தது? 

பிப்ரவரி 6ஆம் தேதி காலை 9 மணிக்கே டி.வி. முன்னாள் உட்கார்ந்துட்டேன். லஞ்சுக்கு மட்டும்தான் எழுந்துருச்சேன். மாலை 4 மணிக்குதான் எனது பெயர் ஸ்கிரீன்ல தெரிஞ்சது. ரொம்ப நெர்வசா இருந்தது. எனக்கு ஐ.பி.எல்.ல விளையாடனும்னுதான் ஆசை. ஆனா எந்த டீமுக்கு ஆடப் போறோம்னு தெரியாது. இவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவேனும் சத்தியமான நினைக்கல. இப்போ என் மேல பாரம் ஏறியிருக்குதுனு நினைக்கிறேன். 

எப்படி உங்களை அடையாளம் கண்டுகிட்டாங்க? 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நெட் பிராக்டிஸ் பண்றப்ப பவுலிங் பண்ண சொன்னார் என்னோட கோச். சர்வதேச வீரர்களுக்கு பந்து வீசும் அனுபவம் கிடைச்சுச்சு. அப்போ ஸ்டீபன் பிளமிங் சாரும் அங்கே இருப்பாரு. அப்படிதான் என்னை தெரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன். அப்புறம் தமிழ்நாடு அணிக்காக விஜய் ஹசாரே டிராபில கலக்கினேன். அதுல மும்பை அணியை தோற்கடிச்சோம். அடுத்து சையத் அலி டி20 டோர்னாமென்ட். ஐ.பி.எல் ஏலத்துக்கு கொஞ்சம் முன்னாடி நடந்த போட்டி இது. இதுல நான்தான் டாப் பவுலர். என்னோட எகனாமி 5.52 மட்டும்தான்.  ஐ.பி.எல்.ல நான் இப்படி ஏலம் போக இதுதான் காரணமா இருக்கும்னு நினைக்கிறேன்.

ரவிச்சந்திர அஸ்வின் பற்றி...? 

ரெண்டு பேரும் சென்னை எஸ்.எஸ்.என்ல படிச்சோம். அவர் காலேஜ் முடிச்சு வெளியே போறாரு. நான் என்ட்ரியாகுறேன். இதனால அவர் கூட அப்போ விளையாடுற வாய்ப்பு கிடைக்கல. ஆனா அதுக்கப்புறம் ரஞ்சில அவர் கூட சேர்ந்து விளையாடுற வாய்ப்பு கிடைச்சது. அதுவும் ஒரே ஒரு போட்டிதான்.  அப்புறம் அவருக்கு இந்திய டீம் வாய்ப்பு கிடைச்சு போயிட்டாரு.  இந்த வருஷம் விஜய் ஹசாரே டிராபிலதான் அவர் கூட பழக அதிக வாய்ப்பு கிடைச்சது. இந்த டைம்ல தமிழ்நாடு டீம் கேப்டன் அவர்தான். கிட்டத்தட்ட 15 நாள் அவர் கூட இருந்தேன். பந்துவீச்சு நுணுக்கங்கள் அத்தனையும் கத்துகிட்டேன். 

உங்க 'தல' தோனி பற்றி என்ன நினைக்கிறீங்க? 

அவர சந்திக்க ரொம்ப ஆர்வமா இருக்குது. அதுக்கான வாய்ப்பு சீக்கிரம் கிடைக்கும். கூடிய விரைவில் புனே அணி நிர்வாகம் என்னை அழைக்கும். எவ்வளவு பெரிய பிளேயர்... இது என்னோட பாக்கியம்னே நினைக்கிறேன்.  

சின்ன வயசுல இருந்தே கிரிக்கெட்ல ஆர்வமா?

பின்ன.. 6 வயசுலயே ஆரம்பிச்சாச்சு. எங்க மாமாதான் ஒய்.எம்.சி.ஏ கோச் சுரேஷ்குமார் சார்ட்ட கொண்டு போய் விட்டாரு. அவர்தான் என்னோட முதல் குருநாதர். அப்புறம் இன்டியா பிஸ்டன்சுக்கு 9 வருசம் ஆடுனேன். அப்புறம் கிராண்ட் ஸ்லாம் கிளப். இப்போ வரைக்கும் இந்த கிளப்தான்.

கிரிக்கெட்டையும் படிப்பையும் எப்படி சமாளிக்கிறீங்க?

ரெண்டுலயும் நான் கில்லிதான். டென்த்ல சி.பி.எஸ்.ஈ சிலபஸ்ல 93 பெர்சன்டேஜ் மார்க் வாங்குனேன். அப்புறம் பிளஸ்2 சாந்தோம் ஸ்கூல்ல படிச்சேன். இதுல 94.5 பெர்சன்டேஜ் மார்க். அதனாலதான் எஸ்.எஸ்.என்ல என்ஜீனியரிங் கிடைச்சது. எனக்கு ரொம்ப நல்ல பிரென்ட்ஸ் இருக்காங்க. அவங்க உதவுவாங்க. அதனால கிரிக்கெட்டால படிப்பு பாதிக்கப்படல. கிரிக்கெட்டும் தடைபடல. 

உங்க அப்பா எழுத்தாளர் இரா. முருகன் பற்றி சொல்லுங்களேன்?

மிடில் கிளாஸ் பேமிலிதான். எங்கப்பா ஒரு மல்டி டேலன்டட். ஹெ.சி.எல்ல வேலை பார்க்குறாரு.25 வருஷமாக எழுதவும் செய்யுறாரு. ஸ்போர்ட்லயும் இன்டரெஸ்ட். இப்படி ஒரு அப்பா கிடைக்க கொடுத்து வச்சுருக்கனும். பணத்துக்கு பெருசா சிரமம் இல்லனாலும். நிறைய ஏற்ற இறக்கங்களை சந்திச்சுருக்கேன். 

கிரிக்கெட்ல உங்க கனவு என்ன?


22 வயசுல முதல் தர போட்டில விளையாடத் தொடங்கினேன். ஆனால் தொடக்கத்துல எங்கிட்ட இருக்குற டேலண்ட் என்னங்குறதுல கண்டுபிடிக்கிறதுல கோட்டை விட்டுட்டேன். அந்த தப்ப மட்டும் செய்யலனா. முன்னாடியே எனக்காக அங்கீகாரம் கிடைச்சுருக்கும். ஆனா இப்போ கிடைச்சதே எனக்கு போதும். ஒவ்வொருத்தரும் தனக்குள்ள என்ன இருக்குங்றத மட்டும் அடையாளம் கண்டுகிட்டா போதும். ஒவ்வொரு முறை நான் தப்பு பண்றப்பவும் அதுல இருந்து கத்துக்குறேன். என்னோட குறைகள் பற்றி கோச்சுகள்ட்ட  கேட்டு திருத்திக்கிறேன்.

இந்தியாவுக்கு விளையாடுற கனவு இருக்குதா?

அது இந்த ஐ.பி.எல். சீசன்லயே தெரிஞ்சுடும். அதுவும் ஒருநாள் நடக்கும்.