புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 பிப்., 2016

வெலிக்கடைச் சிறையில் கோத்தபாயவுக்காக அறை தயார்?


வெலிகடைச்  சிறைச்சாலையில் முக்கிய பிரமுகர்களை தடுத்து வைக்கும் சிறை அறைகள் சில தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை தடுத்து வைப்பதற்காக, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறை அறை தயார் செய்யப்பட்டு வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில் யோஷித்த ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையறைக்கு அருகில் உள்ள சில சிறையறைகளே இவ்வாறு சுத்தம் செய்யப்பட்டு தயார்ப்படுத்தப்பட்டு வருவதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.