புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2016

ரொமான்ஸ் பண்ணாதீர்கள்! யாழ்.பல்கலைக்கழகத்தில் சுவரொட்டி

யாழ்.பல்கலைக்கழகத்தில் விரிவுரை மண்டபங்களில் சிங்கள மாணவ ஜோடிகள் அநாகரீகமாக நடந்து கொள்ளும் நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்படி விரிவுரை மண்டபங்களில் "ரொமான்ஸ் பண்ணாதீர்கள்" என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சிங்கள மாணவ ஜோடிகள் விரிவுரை மண்டபத்திற்குள் ஜோடியாக இருந்தல் மற்றும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருத்தல் மற்றும் முத்தமிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மாணவர்களால் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் மேற்படி சிங்கள மாணவர்களிடம் இது தொடர்பாக தெரியப்படுத்தியபோதும் அது தொடர்பாக அந்த மாணவர்கள்  பெரிதாக அலட்டிக் கொள்ளாத நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் இந்த திடீர் சுவர் ஒட்டி முடிவை எடுத்துள்ளது.
இந்த சுவரொட்டி விரிவுரை மண்டபங்களில் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ரொமான்ஸ் பண்ணுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு ஒட்டப்பட்டிருந்தன.

ad

ad