புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 பிப்., 2016

மகிந்தவின் குடும்ப வருமானத்தை தேடிப்பார்த்தபோது, கிடைத்த அதிர்ச்சிகள் (முழு விபரம்) Read more: http://www.vanniexpressnews.com/2016/02/blog-post_955.html#ixzz3zqFrCz4E தயவு செய்து இவ்வாறு செய்வதை நிறுத்திக்கொள்ளுங்கள்.- அட்மின்


ஐக்கிய முன்னணி அரசாங்கம் குற்ற நியாய நீதி ஆணைக்குழுவை நியமித்த போது அதற்கு ஆதரவு வழங்கிய மகிந்த ராஜபக்ச
, நிதி மோசடி விசாரணைப் பிரிவை எதிர்ப்பது கேலிக்குரியது என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எப்.சி,ஐ.டி என்பது வழக்கு விசாரிக்கும் இடமல்ல. ஆனால், அப்படியான சந்தர்ப்பங்களும் இருந்தன. 1971 ஆம் புரட்சி உங்களுக்கு நினைவிருக்கலாம்.

புரட்சியுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த ஐக்கிய முன்னணி அரசாங்கம் குற்ற நியாய நீதி ஆணைக்குழுவை நியமித்தது.

தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றை தொடங்க 25 வயதான இளைஞனுக்கு எப்படி இந்தளவு பணம் கிடைத்தது என சிவில் சமூகம் கேட்கிறது. தற்போது விசாரணை நடத்தும் போது மேலோகத்தில் இருக்கும் தேங்காய் தெரிய ஆரம்பித்துள்ளதுடன் சீனிகம ஆலயத்திற்கு சென்று தேங்காய் உடைக்கின்றனர்.

தேங்காய் உடைக்கும் தேவையில்லை. பணம் எப்படி கிடைத்தது என்று கூறினால் போதும். அப்போது நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வரும். ஆலயத்திற்கு செல்வதால், ஊழலை மறைக்க முடியாது.

சீனிகம என்பது நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்தில் உள்ளது. திருடி உடைக்கும் தேங்காயால் பாதிப்பு ஏற்படும் என்ற ஒரு கதையும் நம்பிக்கையும் உள்ளது.

சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியை ஆரம்பிக்க யோஷித்த ராஜபக்சவுக்கு 340 மில்லியன் ரூபா எப்படி கிடைத்தது என்பது குறித்தே நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் தங்காலை பீச் ஹொட்டலை கொள்வனவு செய்ய பணமாக 157 மில்லியன் கிடைத்திருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது எனவும் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க,

மகிந்த ராஜபக்சவின் குடும்ப வருமானம் எவ்வளவு என்று தேடிப்பார்த்தோம். மகிந்த 1970 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

1970 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 1972 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 22 ஆம் திகதி வரை 23 மாதங்களுக்கு மாதம் 600 ரூபா வீதம் 13 ஆயிரத்து 800 ரூபாவை சம்பளமாக பெற்றுள்ளார்.

1972 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் அவர் 52 மாதங்கள் பதவி வகித்துள்ளார். மாதம் ஆயிரம் ரூபா என்ற கணக்கில் 52 ஆயிரம் ரூபாவை சம்பளமாக பெற்றுள்ளார். இதனடிப்படையில் இரண்டாது நாடாளுமன்றத்தில் பதவி வகித்தமைக்காக 8 லட்சத்து 6 ஆயிரத்து 550 ரூபாவை ஊதியமாக பெற்றுள்ளார்.

மூன்றாவது நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தமைக்காக 13 லட்சத்து 35 ஆயிரத்து 575 ரூபாவை சம்பளமாக பெற்றுள்ளார்.

நான்காவது நாடாளுமன்றத்தில் 12 மாதங்கள் அங்கம் வகித்தமைக்காக 4 லட்சத்து 33 ஆயிரத்து 200 ரூபாவை சம்பளமாக பெற்றுள்ளார். 5வது நாடாளுமன்றத்தில் 9 லட்சத்து 38 ஆயிரத்து 600 ரூபாவை சம்பளமாக பெற்றுள்ளார்.

6வது நாடாளுமன்றத்தில் பதவி வகித்தமைக்காக 6 லட்சத்து 80 ஆயிரத்து 500 ரூபாவை பெற்றுள்ளார். 
2005 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பதவி வகித்தமைக்காக அவருக்கு 92 லட்சத்து 25 ஆயிரம் ரூபா சம்பளமாக கிடைத்திருக்கும். 1970 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் மகி்நத ராஜபக்சவின் மொத்த வருமானம் ஒரு கோடியே 35 லட்சம் ரூபா.

நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 61 மாதங்களில் 41 லட்சத்து 4 ஆயிரத்து 385 ரூபாவை சம்பளமாக பெற்றுள்ளார்.

யோஷித்த ராஜபக்ச 2006 ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்து கொண்டதுடன் கடற்படை லெப்டினட் என்ற வகையில் அவருக்கு மாதம் 28 ஆயிரத்து 435 ரூபா சம்பளமாக வழங்கப்பட்டு வந்துள்ளது. இதனை சேர்த்தால் 31 லட்சத்து 84 ஆயிரத்து 720 ரூபாவை மொத்த சம்பளமாக பெற்றுள்ளார்.

இவ்வாறு கணக்கிடும் போது ராஜபக்ச குடும்பத்தினரின் அதிகாரபூர்வமான முழுமையான வருமானம் இண்டு கோடியே 8 லட்சத்து 9 ஆயிரத்து 630 ரூபா. இப்படியான நிலையில் யோஷித்த ராஜபக்ச சீ.எஸ்.என். தொலைக்காட்சியை ஆரம்பிக்க ராஜபக்ச குடும்பத்தினருக்கு எப்படி 340 மில்லியன் ரூபா கிடைத்தது?, இது சம்பந்தமாகவே தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.


Read more: http://www.vanniexpressnews.com/2016/02/blog-post_955.html#ixzz3zqFPBK98 
தயவு செய்து இவ்வாறு செய்வதை நிறுத்திக்கொள்ளுங்கள்.- அட்மின்