புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2016

பிரதமர் மோடியின் ‘பாஸ்போர்ட்’ விவரங்களை கேட்கும் மனைவி தகவல் அறியும் சட்டத்தில் மனு செய்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதாபென் கடந்த நவம்பர் மாதம் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்தார். ஆனால் அவர் தனது
திருமண சான்றிதழையோ, மோடியை திருமணம் செய்ததற்கான இருவரும் கையெழுத்திட்ட பிரமாண பத்திரத்தையோ தாக்கல் செய்யவில்லை. எனவே அவர் மோடியுடன் திருமணம் ஆனவர் என்பதை நிரூபிக்க தவறியதாக கூறி அவரது பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டப்படி நேற்று ஒரு விண்ணப்பம் கொடுத்தார். அதில், நரேந்திர மோடி குஜராத் முதல்–மந்திரியாக இருந்தபோது பாஸ்போர்ட் பெறுவதற்காக திருமணம் தொடர்பாக தாக்கல் செய்த ஆவணங்களை வழங்கும்படி கேட்டுள்ளார். அவர் கேட்டிருக்கும் ஆவணங்கள் அளிக்கப்படும் என்று பாஸ்போர்ட் மண்டல அதிகாரி கான் கூறினார்.

ad

ad