புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 பிப்., 2016

வவுனியாவில் தமது ரியூசன் சென்ரருக்கு வராத மாணவர்களை பழிவாங்கும் ஆசிரியர்கள்

வவுனியா நகரப்பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களை தமது ரியூசன் சென்ரர்களுக்கு வருமாறு ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரப்பகுதியில் கல்வி கற்கும் பல ஆசிரியர்கள் நகரப் பகுதியில் உள்ள ரியூசன் சென்ரர்களிலும் கற்பிக்கின்றனர்.
இவர்கள் பாடசாலையில் தம்மிடம் கற்கும் மாணவர்களை தம்மிடமே ரியூசன் வரவேண்டும் என வற்புறுத்துவதுடன், அவ்வாறு வராத மாணவர்களை பரீட்சைகளில் பழிவாங்குவதாகவும் மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தமது கல்வியை சுதந்திரமாக தமக்கு விளங்கக் கூடிய வகையில் இதனால் கற்பிக்க முடிவதில்லை எனவும், ஆசிரியர்களுக்கு பயந்து தாம் அவர்களிடமே செல்ல வேண்டியுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.