புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 பிப்., 2016

யாழ்.மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் பேருந்துகளை கண்காணிக்கும் பணிகள் ஆரம்பம்

யாழ்.மாவட்டத்தில் சேவையில் ஈடுபடுகின்ற தனியார் மற்றும் இ.போ.ச பேருந்துகளைக் கண்காணிக்கும் பணிகள் மாவட்டத்தின் பல இடங்களிலும் நேற்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் போது விதிமுறைகளை மீறியிருக்கின்ற பேருந்துகளுக்கு காலவரையும் விதிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளுக்கும் தனியார் பேருந்துகளுக்கும் இடையிலான போட்டி காரணமாக குறித்த இரு தரப்பினர்களும் தொடர்ச்சியாக விதிமுறைகளை மீறிச் செயற்பட்டு வருவது கண்டறியப்பட்டிருக்கின்றது.
இதனால் பல்வேறு பாதிப்புக்களை பொது மக்கள் எதிர்நோக்கி வந்திருந்த நிலையில் பல உயிரிழப்புக்களும் ஏற்பட்டிருக்கின்ற நிலையில், தனியார் பேருந்துகளின் விதிமுறை மீறிய செயற்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் தற்போது தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மாவட்டத்தில் பொது மக்கள் சேவையில் ஈடுபடுகின்ற தனியார் பேருந்துகள் அனைத்தும் நேற்று முதல் மாவட்டத்தின் பல இடங்களிலும் பொலிஸாரும் மோட்டர் போக்குவரத்துத் திணைக்களத்தினரும் இணைத்து கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் பரிசோதனைகளிலும் ஈடுபடவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்திருந்தார்.
இதற்கமைய நேற்றுக் காலை முதல் மாலை வரை குடாநாட்டின் பிரதான வீதிகளில் சென்ற தனியார் பேருந்துகள் மறிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் விதிமுறைகளை மீறியவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த கால அவகாசவத்திற்குள் விதிமுறைகளைப் பின்பற்றாதுவிட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அறிவுறுத்தப்படுள்ளது.
அதே நேரம் தொடர்ந்தும் மாவட்டத்தின் பல இடங்களிலும் இக் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பொது மக்கள் சேவையில் ஈடுபடும் இ.போ.ச மற்றுமு; தனியார் பேருந்துகள் அனைத்தும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் இனி கண்காணிக்கப்பட்டு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அரச அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.