14 பிப்., 2016

ஒபாமா விரைவில் அறிவிக்கிறார்: அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக தமிழர்?

மெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த  ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன் நியமிக்கப்படவுள்ளார். விரைவில் இது
குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிடவுள்ளார். 

தற்போது 48 வயதான ஸ்ரீனிவாசனின் குடும்பம் சண்டிகாரில் வசித்து வந்தது.  கடந்த 1960ஆம் ஆண்டு அவரது குடும்பம் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது. அமெரிக்காவிலேயே பட்டபடிப்பை முடித்த அவர், வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். தற்போது கொலம்பியா மண்டல மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் அவர் நீதிபதியாக உள்ளார். 

அண்மையில் அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆன்டோனின் ஸ்கோலியா மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு ஸ்ரீ னிவாசன் நியமிக்கப்படவுள்ளார். இந்த பட்டியலில் ஸ்ரீ னிவாசனின் பெயர் முதலிடத்தில் உள்ளதால், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒபாமாவின் ஆட்சிகாலம் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதால், மிக விரைவிலேயே இந்த பதவிக்கான அறிவிப்பை ஒபாமா வெளியிடுவார் என சொல்லப்படுகிறது. அதே வேளையில் புதிய அதிபர்தான் இனிமேல் உச்சநீதிமன்ற நீதிபதியை நியமிக்க வேண்டுமென்றும் எதிர்கட்சிகள் கூறி வருகின்றன. 

எனினும் இந்த பதவியில் நியமிக்கப்பட்டால், அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் முதல் இந்தியர் அதுவும் தமிழர் என்ற பெருமை ஸ்ரீனிவாசனுக்கு கிடைக்கும். ஸ்ரீனிவாசனின் தந்தை பத்மநாபன்  நெல்லை மாவட்டம் மேலதிருவேங்கடநாதபுரத்தை சேர்ந்தவர். கன்சாஸ் பல்கலையில் கணிதவியல் பேராசிரியராக பணியாற்றினார். தாயார் சென்னையை சேர்ந்தவர்