14 பிப்., 2016

ஐக்கிய நாடுகள் யோசனையில் இலங்கை படைவீரர்களை கைதுசெய்ய வழியுள்ளதாகமஹிந்தவும் கோத்தபாயவும் பொய் கூறுகின்றார்கள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனையில் இலங்கை படைவீரர்களை கைதுசெய்ய வழியுள்ளதாகவும் அதனை இலங்கை
அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்தை பாதுகாப்பு பிரதியமைச்சர் ருவன் விஜேயவர்த்தன நிராகரித்துள்ளார்.
பியகமையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர்,
ஐக்கிய நாடுகளின் யோசனை தொடர்பில் மஹிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச மற்றும் கூட்டு எதிர்கட்சியினர் தெரிவித்து வரும் கருத்துக்கள் முற்றிலும் தவறானவையாகும்.
இந்தநிலையில் யோசனை தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கும் முழுப்பொறுப்பும் இலங்கையிடம் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளமையையும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
படையினரை பாதுகாக்கும் கடப்பாட்டை ஜனாதிபதியும் பிரதமரும் உறுதிப்படுத்தியுள்ளமையையும் கோடிட்டு காட்டியுள்ளார்.