14 பிப்., 2016

இலங்கையின் சிறந்த விளையாட்டு நட்டசத்திரமாக யாழ் பல்கலைக்கழக மாணவன்

11291903_713713662087579_568907080_n-720x480
இலங்கையின் சிறந்த விளையாட்டு நட்டசத்திரமாக யாழ் பல்கலைக்கழக கால்ப்பந்தாட்ட வீரனும் தேசிய கால்ப்பந்தாட்ட அணியில்
இடம்பிடித்துள்ளவருமான செபமாலைநாயகம் ஞானரூபன் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இலங்கை பல்கலைக்கழங்களிலுள்ள சிறந்த விளையாட்டு வீரரை தெரிவு செய்யும் வகையில் இடம்பெற்ற இணைய வாக்கெடுப்பிலேயே சிறந்த வீரராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மொத்தம் 16 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களில் சிறந்த விளையாட்டு வீரனைத் தெரிவு செய்வதற்காக http://sports.moraspirit.com  என்னும் இணையத்தளத்தில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது.
வாக்கெடுப்பு ஆரம்பமான நாளிலிருந்து முதலிடம் வகித்த ஞானரூபன், இறுதியில் சிறந்த நட்சத்திரமாக வெற்றிபெற்றார். இளவாலையைச் சேர்ந்த ஞானரூபன், தேசிய கால்ப்பந்தாட்ட அணியில் இருக்கும் ஒரேயொரு தமிழ் வீரன் ஆவார். இதன்போது அவர், 5481 வாக்குகளை பெற்றிருந்தனர். இவருக்கு அடுத்ததாக 3198 வாக்குகளை பெற்று, மொறட்டுவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த றக்பி வீரர் ஹேஸன் சில்வா இரண்டாமிடத்திலும், கொழும்புப் பல்கலைக்கழக நீச்சல் வீரன் சமீர சுலோச்சன விதானஹே 1609 வாக்குகளுடன் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.