புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2016

மாலையும் கழுத்துமாக பரபரப்பை ஏற்படுத்திய சிம்பு-நயன்தாரா



சிம்பு-நயன்தாரா காதல் முறிவுக்கு பிறகு எந்த படங்களிலும் சேர்ந்து நடிக்காத இருவரும், தற்போது ‘இது நம்ம ஆளு’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். 

இப்படத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடப்பதுபோன்ற ஒரு காட்சி இருக்கிறது. ஏற்கெனவே, இந்த காட்சி எடுக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், காதலர் தினமான இன்று ‘இது நம்ம ஆளு’ படக்குழுவினர் இப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், சிம்புவும், நயன்தாராவும் கழுத்தில் மாலையுடன் திருமண வரவேற்பில் நிற்பது போன்ற புகைப்படத்தை அச்சிட்டுள்ளனர். 

இந்த போஸ்டர்கள் இன்று சென்னை நகரம் முழுவதும் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ad

ad