14 பிப்., 2016

கொச்சிக்கடையில் மஹிந்த ஆதரவாளர்களின் கூட்டம்ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கூடி பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, உதய கம்மன்பில உட்பட மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவான கூட்டு எதிர்க்கட்சியினர் கலந்து கொண்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் புதிய பயணம் அவசியம் என்ற தலைப்பில் இந்த பேச்சுவார்த்தையும் கலந்துரையாடலும் நடைபெற்ற வருகிறது.
எமது ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி என்ற பெயரில் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில், புதிய கட்சி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இது குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டு வருவதாக தெரியவருகிறது.