14 பிப்., 2016

காங்கிரஸ் காங்கிரஸ் எம்.பி. கண்ணன் அதிமுகவில் சேர்ந்தார்

அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

’’அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை இன்று (ஞாயிற்றுக் கிழமை), காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்தவரும், புதுச்சேரி மாநில சட்டமன்றப் பேரவையின் சபாநாயகராகவும், அமைச்சராகவும், பின்னர் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவருமான பி.கண்ணன் நேரில் சந்தித்து, தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், புதுச்சேரி மாநிலக் கழகச் செயலாளர் புருஷோத்தமன், எம்.எல்.ஏ., ஆகியோர் உடன் இருந்தனர்’’என்று தெரிவித்துள்ளது.